APMODY: the best blogger template for posting apps as well as articles in one blog.. Get now!

Search Suggest

தீவிரமடையும் போர்க்களம்! இஸ்ரேலுடன் கூட்டு சேரும் மூன்று நாடுகள்

ஹமாஸ் படைகள் இஸ்ரேல் எல்லையில் கடும் தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், மேற்கத்திய நாடுகள் பல தங்கள் ஆதரவை இஸ்ரேலுக்கு அறிவித்துள்ளன.

தற்போது ஜேர்மனி மற்றும் அமெரிக்காவுக்கு பின்னர் பிரித்தானியாவும் இராணுவ உதவிகளை முன்னெடுக்க தயாராகியுள்ளது.

சிறப்பு படைகள்

இஸ்ரேல் இராணுவத்துடன் இணைந்து அமெரிக்க சிறப்பு படைகள் பணியாற்றி வருவதாகவும், ஹமாஸ் படைகளை மொத்தமாக அழிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


ஜேர்மனி போர்க்களத்தில் பயன்படுத்தும் ட்ரோன் விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது. ஜேர்மனி பாதுகாப்பு அமைச்சர் Boris Pistorius தெரிவிக்கையில், இஸ்ரேலுடன் எந்த கட்டத்திலும் ஜேர்மனி துணையிருக்கும் என்றார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரித்தானியா அரசாங்கம் இராணுவ விமானங்கள், கப்பல் மற்றும் சிறப்பு படையினரையும் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிஷி சுனக்கின் அலுவலகம்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் அலுவலகம் தெரிவிக்கையில், வெள்ளிக்கிழமை ராயல் நேவி ரோந்து கப்பல்கள், உளவு விமானங்கள் மற்றும் துருப்புக்கள் இஸ்ரேலுக்கு பயணிக்கும் என அறிவித்துள்ளது.


பிரித்தானியா தரப்பில் P8 விமானம், கண்காணிப்பு கருவிகள், இரண்டு ராயல் நேவி கப்பல்கள், மூன்று மெர்லின் ஹெலிகொப்டர்கள் மற்றும் ராயல் மரைன்களின் படை ஒன்றும் இஸ்ரேலில் களமிறங்க உள்ளது.

அத்துடன், இஸ்ரேலில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை வெளியேற்ற விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான தரவுகளின் அடிப்படையில் இஸ்ரேல் மற்றும் காஸாவில் தற்போது 60,000 பிரித்தானிய பிரஜைகள் உள்ளனர் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், இஸ்ரேலில் ஹமாஸ் படைகளில் வெறியாட்டம் இனி தொடராத வகையில் தங்கள் ஆதரவை உறுதி செய்துள்ளதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

மேலும், நட்பு நாடுகளுடன் இணைந்து பிரித்தானியாவின் சர்வதேச தரம் வாய்ந்த இராணுவமும் இஸ்ரேலில் களமிறங்கும் எனவும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.